தூத்துக்குடி: 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நவதிருப்பதி தலங்களில் இரண்டாவது தலமாக விளங்கும் நத்தம் ஸ்ரீ விஜயாசன பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோத்ஸவம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டுக்கான திருவிழா நேற்று திருமுளைச்சாத்துடன் துவங்கிய நிலையில் வரும் 24ஆம் தேதி வரை திருவிழா நடக்கிறது. திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம், நித்திய கோஷ்டி நடந்தது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கொடி பட்டம் கோவில் வளாகத்தைச் சுற்றி வரப்பட்டு காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 9 மணிக்கு பெருமாள் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு, பகல் 11 மணிக்கு திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டியும் நடந்தது.