தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டட ஒப்பந்ததாரர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் - மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு

தூத்துக்குடியில் கட்டட ஒப்பந்தக்காரர் வீட்டு அருகே மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் முற்றிலும் எரிந்து சேதமாகியது.

Etv Bharatதூத்துக்குடி கட்டட ஒப்பந்தகாரரின் காரில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்
Etv Bharatதூத்துக்குடி கட்டட ஒப்பந்தகாரரின் காரில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்

By

Published : Dec 30, 2022, 9:24 PM IST

தூத்துக்குடி கட்டட ஒப்பந்தகாரரின் காரில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி டூவிபுரம் 2ஆவது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். பாண்டிச்சேரியை சேர்ந்த இவர் தூத்துக்குடியில் தங்கி கட்டட பணிகள் வேலை எடுத்து செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று (டிச.29) இரவு தனது வீடு அருகே கட்டட வேலை பணிக்காக பயன்படுத்தப்படும் டாட்டா சுமோ காரை நிறுத்தியுள்ளார். நேற்று இரவு காரில் இருந்து திடீரென பயங்கர சத்தம் வர அருகே இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கும் மற்றும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். காரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தீயை வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி தாலுகா அலுவலகம் அருகே கார் தீ பற்றி எரிந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Exclusive: “தட்டி கொடுப்பார்கள் என்று நினைத்தேன், தள்ளிவிட்டார்கள்” - பிரபு சாலமன்

ABOUT THE AUTHOR

...view details