தூத்துக்குடி: திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தூத்துக்குடியில் உள்ள குறிஞ்சி நகரில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார். இரண்டு பகுதியாக அமைந்துள்ள இந்த வீட்டின் ஒரு பகுதியை தங்குவதற்காகவும், மற்றொரு பகுதியை அலுவலகமாகவும் கனிமொழி எம்பி பயன்படுத்தி வருகிறார்.
தற்போது தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருவதால், தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக இந்த வீட்டிலேயே கனிமொழி எம்பி தங்கியிருக்கிறார். மேலும் ஒவ்வொரு நாளும் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இவர், இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டிற்கு வந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.