தூத்துக்குடி:முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மீக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பத்தர்கள் வந்து செல்வார்கள்.
தமிழகத்தின் பல பகுதியில் மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து செல்கிறார்கள். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவிலான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து சாமி வழிபட்டுச் செல்வார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயிலை ஒட்டியுள்ள கடற்கரையிலும் நாழி கிணற்றிலும் புனித நீராடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்றும் (மார்ச் 11) ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். அப்போது கடற்கரையை ஒட்டி உள்ள நாழிக் கிணற்றில் பக்தர்கள் நீராடிக் கொண்டிருந்தனர். வெளியூரிலிருந்து வந்திருந்த பக்தர் ஒருவர் நாழி கிணற்றில் நீராடி விட்டு வெளியே வந்த போது அங்குச் சந்தேகம் படும்படியான வெடிகுண்டு போன்ற பொருள் கிடந்ததும் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.