தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரத்துறை ஊழியர் எனக்கூறி போலி மீட்டர் விற்பனை.. எட்டயபுரத்தில் பெண்ணிடம் ரூ.5500 சுருட்டல்! - இன்றையச் செய்திகள்

தூத்துக்குடி, எட்டயபுரத்தில், பெண்ணிடம் மின்சாரத்துறை ஊழியர் என பொய் கூறி மின் மீட்டரை விற்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மின்சாரத்துறை ஊழியர் எனக்கூறி மின் மீட்டரை விற்ற சம்பவம்.
மின்சாரத்துறை ஊழியர் எனக்கூறி மின் மீட்டரை விற்ற சம்பவம்.

By

Published : May 31, 2023, 1:49 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் கார்த்திகை வீதியில் சாத்துரப்பன் வசித்து வருகிறார். இவரது மகன் தனசேகரன் என்பவருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளது. இந்த வீட்டை தனசேகரன், அழகு ராதா கிருஷ்ணன், குணசுந்தரி (வயது 45) தம்பதியினருக்கு வாடகைக்கு கொடுத்து உள்ளார். மற்றொரு வீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

மேலும் வீட்டில் மின் வயர்கள் பொருத்தும் பணியும் நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலையில் அழகு ராதா கிருஷ்ணன் வீட்டிற்கு வெள்ளை நிற பேண்ட் சர்ட் அணிந்த நபர் ஒருவர் வந்து உள்ளார். அப்போது வீட்டில் இருந்த குணசுந்தரி மட்டும் தனியாக இருந்து உள்ளார். அப்போது வந்த, அந்த நபர் எட்டயபுரம் மின் வாரியத்திலிருந்து வந்திருப்பதாக கூறி உள்ளார்.

மேலும் சாத்துரப்பன் பெயருக்கு புதிய மின் இணைப்புப் பெற விண்ணப்பம் செய்து உள்ளார். எனவே அதற்கு புதிய மின் அளவீடு செய்யும் மீட்டர் வந்து உள்ளது என்றுக் கூறி உள்ளார். பின், தான் கொண்டு வந்த ஒரு மின் அளவீடு மீட்டரை கொடுத்து அதன் கட்டணமாக ரூ.5,100 தேவை என்றும் கேட்டு உள்ளார். இதனை அடுத்து குணசுந்தரி மதுரையில் வசித்து வரும் வீட்டு உரிமையாளர் தனசேகரன் தாயார் ரத்தினம்மாளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.

அவரிடம் மீட்டர் மாற்றுவதற்காக மின்சார துறையில் இருந்து ஆள் வந்தது குறித்த தகவலை தெரிவித்து உள்ளார். இரத்தினம்மாள் குணசுந்தரியிடம் மின்வாரிய ஊழியருக்கு பணம் கொடுக்க கூறி உள்ளார். குணசுந்தரியும் போலி மின் ஊழியரிடம் ரூ.5500 கொடுத்து உள்ளார். அப்போது தன்னிடம் சில்லரை இல்லை என்றுக் கூறி சில்லறை மாற்றி வருவதாக அந்த மர்ம நபர் கூறி சென்று உள்ளார்.

நீண்ட நேரமாகியும் மின் ஊழியர் வராததால் குணசுந்தரி இது குறித்து எட்டயபுரம் மின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு உள்ளார். மின்சார அலுவலகத்தில் இருந்து புதிய மின் மீட்டர் மாற்ற யாரையும் அனுப்பவில்லை என்று தெரிவித்து உள்ளனர். இதை கேட்ட குணசுந்தரி தான் போலி மின் ஊழியரிடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உள்ளார்.

பின், இந்த நிகழ்வு குறித்து அருகில் உள்ள எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து எட்டயபுரம் மின் வாரிய அலுவலகம் மற்றும் எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த மர்ம நபர் வேறு யாருக்கும் இது போல மீட்டர் கொடுத்து ஏமாற்றியுள்ளாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:திருச்சியில் தொடர் கதையாகி வரும் தங்கம் கடத்தல்.. ஹேர் டை கிரைண்டர் தங்கம் கடத்திய நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details