தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உரிய அனுமதியின்றி எம்.சண்ட் மணல் எடுத்துச்சென்ற ஐந்து லாரிகளை காவல் துறையினர் பறிமுதல்செய்து, லாரி ஓட்டுநர்கள் ஐந்து பேரையும் கைதுசெய்தனர்.
எம்.சண்ட் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுப்பிரமணியாபுரம் விலக்கில் நேற்றிரவு (மார்ச் 7) காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் வந்த ஐந்து லாரிகளைக் காவல் துறையினர் சோதனையிட்டபோது, எம்.சண்ட் மணல் இருப்பது தெரியவந்தது.
எம்.சண்ட் மணல் கடத்திவரப்பட்ட லாரி ஆனால் எம்.சண்ட் மணல் எடுத்துச் செல்வதற்கு உரிய ஆவணம் இல்லை என்பதும், உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து லாரிகளையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
ஓட்டுநர்கள் விவரம்
மேலும் லாரிகளை ஓட்டிவந்த ஓட்டுநர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள்:
எம்.சண்ட் மணல் கடத்திவரப்பட்ட லாரி - அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மூவேந்திரன்,
- கமுதியைச் சேர்ந்த கார்த்திக்ராஜ்,
- ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன்,
- சதிஷ்குமார்,
- தர்மதுரை
இதையும் படிங்க:சோப்புக்கட்டிக்குள் மறைத்து கடத்திவந்த ரூ.35.7 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் - பயணி கைது