தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், தமிழ்நாடு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.
அப்போது தாப்பாத்தி, குளத்துள்வாய்பட்டி முகாம்களைச் சேர்ந்த 118 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, 475 குடும்பங்களுக்கு பாத்திரங்கள், 28 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சமுதாய முதலீட்டு நிதி உள்ளிட்டவை என 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செய்தியாளரிடத்தில் பேசிய கனிமொழி எம்பி நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளரிடம் கனிமொழி பேசுகையில், “இலங்கைத் தமிழர் மறுவாழ்வில் உள்ள மக்களுக்கு முதலமைச்சர் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறார்.
மழை வெள்ளத்தால் பெரும் இழப்பைச் சந்தித்த உழவருக்கு உரிய நிவாரணம் (Relief fund for farmers) கிடைக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிச்சயமாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க:Farm Laws: 'போராடிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து' - கே.எஸ். அழகிரி