தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் மழைநீரை அகற்ற நடவடிக்கை - கனிமொழி எம்.பி - MP Kanimozhi said action to remove rainwater in Thoothukudi

தொடர் மழை காரணமாக தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

எம்.பி கனிமொழி ஆய்வு
எம்.பி கனிமொழி ஆய்வு

By

Published : Oct 30, 2021, 4:49 PM IST

தூத்துக்குடி: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், செல்வநாயகபுரம், குறிஞ்சி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, சென்மேரிஸ் காலனி, லூர்தம்மாள் புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு எதிர்பாராத வகையில் அதிக அளவு மழை பெய்துள்ளது. மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீரை வெளியேற்ற 200 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 50 இடங்களில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. 17 இடங்களில் மழை நீரை வெளியேற்றும் மோட்டார் அறைகள் கட்டப்பட்டு அதன் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விரைவாக மழைநீர் அகற்றப்படும்" என்றார்.

எம்.பி கனிமொழி ஆய்வு

இந்த ஆய்வில் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:’முல்லைப் பெரியாறு தென் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நீர்’ - வைகோ

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details