தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க கனிமொழி அறிவுறுத்தல

தூத்துகுடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

தூத்துகுடியில் ஸ்மார்ட் சிட்டி பணி
தூத்துகுடியில் ஸ்மார்ட் சிட்டி பணி

By

Published : Oct 9, 2021, 6:59 AM IST

தூத்துக்குடி:ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ஸ்மார்ட் சிட்டி பணி ஆய்வு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

பணி நியமன ஆணை

இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைவாக முடிப்பதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் 20 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை கனிமொழி எம்பி வழங்கினார்.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கையடக்க மடிக்கணினியை வழங்கினார்.

பணி நியமன ஆணை வழங்கல்

ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைந்து முடிக்க நடவடிக்கை

இதைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், ”தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்றுவருகிறது. அதை விரைவுபடுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி பணி

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் முழுமையாக நிறைவுபெறும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. முதல்கட்டமாக மழைநீர் வடிகால், சாலைகளை ஒரு மாதத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

இதையும் படிங்க : நீலகிரி மலை ரயிலில் கட்டணக்குறைப்பை வலியுறுத்தி வரும் 18ஆம் தேதி போராட்டம்: விசிக அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details