தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் விறகு கடையில் கூலி வேலை செய்துவருபவர் மனுவேல்(60). அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வருவதாகவும், அதில் ஓட்டுநர் வேலை உள்ளது எனவும் கூறி நம்பவைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த வேலையை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.30 ஆயிரம் முன்பணம் கேட்டுள்ளார். அதனால் மனுவேல் வீட்டிலிருந்த நகையை அடகு வைத்து ரூ.30 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து, தனது மகனுக்கு வேலையை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.