தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, முதலில் தூத்துக்குடி மக்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
மோடி இயக்கும் பொம்மைகளாக அமைச்சர்கள் இருக்கின்றனர்- சஞ்சய்தத் விமர்சனம் - இயக்கும் பொம்மைகள்
தூத்துக்குடி: பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பொம்மைகள் போல் தமிழக அமைச்சர்களை இயக்கி வருகிறார் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் விமர்சனம் செய்துள்ளார்.
ஏனெனில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் - திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள் என்ற செய்தியை எங்களுக்கு தரப்போகிறார்கள்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கொண்டு பொம்மைகளை போல் தமிழக அமைச்சர்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் போடும் தாளங்களுக்கு ஆடும் நபர்களாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வமும் செயல்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.