திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நேற்று இரவு நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டுனர்.
கூட்டத்தில் பேசிய கனிமொழி, "ஸ்டெர்லைட் விவகாரத்தில் எந்தவித காரணமும் இல்லாமல் 13 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் குறித்து சமூக ஆர்வலர் முகிலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். பிறகு அவருக்கு என்ன நேர்ந்ததென்று இதுவரை தெரியவில்லை.
அரசை எதிர்த்து யார் குரல்கொடுத்தாலும், அவர்கள் இந்த மண்ணிலே வாழ முடியாது என்ற மோசமான நிலையை அதிமுக, பாஜக அரசுகள் உருவாக்கியுள்ளன.