கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. மேலும், கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்றவற்றிற்காக மக்கள் வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மக்கள் பணப்பரிவர்த்தனைக்காக வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்க தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நடமாடும் ஏ.டி.எம். வாகனத்தை கூடுதல் சேவையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மொபைல் ஏ.டி.ஏம். சேவை அதன்படி இந்த வாகனம் இன்று தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போல்டன்புரம், ராமசாமிபுரம், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தனது நடமாடும் ஏ.டி.எம். வாகன சேவை வழங்கப்பட்டது. இதையடுத்து, மக்கள் தங்களுக்குத் தேவையான பணத்தினை ஏ.டி.எம். மூலமாக வீட்டிற்கு அருகிலேயே எடுத்துக்கொண்டனர்.
இது குறித்து அப்பகுதியை ராஜேஷ் பேசுகையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை மாநகராட்சி நிர்வாகம் தன்னார்வலர்கள் மூலம் கொடுத்துவருகிறது. அதுபோல கிருமிநாசினி தடுப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாகச் செய்துவருகின்றனர். தற்போது பணத்தேவையைப் பூர்த்திசெய்ய மொபைல் ஏ.டி.எம். மையங்களையும் ஏற்பாடுசெய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.
இதையும் படிங்க:கரோனா: நடமாடும் ஏடிஎம் வாகன சேவை தொடக்கம்