தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உயிர்குடிக்கும் மாவட்டமாக மாறும் தூத்துக்குடி' - ஸ்டாலின் காட்டம் - திமுக

தூத்துக்குடி: எட்டயபுரத்தில் காவல் துறையினர் அடித்ததில் மனமுடைந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் உயிர்குடிக்கும் மாவட்டமாக மாறிவருகிறது எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

thoothukudi  தூத்துக்குடி  முக ஸ்டாலின் ட்வீட்  காவல் நிலைய மரணம் ஸ்டாலின் கருத்து  custody death  MK Stalin tweet on custody death  dmk  திமுக  எட்டயபுரம் காவல் நிலைய மரணம்
உயிர் குடிக்கும் மாவட்டமாக மாறும் தூத்துக்குடி: ஸ்டாலின் காட்டம்

By

Published : Jun 27, 2020, 8:34 PM IST

Updated : Jun 27, 2020, 9:22 PM IST

தூத்துக்குடி சாத்தான்குளத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் வணிகர்கள் இருவர் உயிரிழந்தனர். இவர்களைக் காவல் துறையினர் அடித்துக்கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இச்சூழலில் நேற்று #JUSTICEFORJAYARAJANDBENNIX என்ற ஹாஸ்டாக் ட்ரெண்டானது.

இதைத் தொடர்ந்து அதே தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினர் தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி காவல் துறையினரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார். உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களைக் காப்பாற்றுகிறாரா முதலமைச்சர், என்று கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:காவல் துறையினர் தாக்குதல்: இளைஞர் மனமுடைந்து தற்கொலை

Last Updated : Jun 27, 2020, 9:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details