தூத்துக்குடி, தட்டாப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழசெக்காரக்குடி பேருந்து நிறுத்தத்தில், கோரம்பள்ளம் மாதவன் நகரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் தான் வைத்திருந்த ஐந்து சவரன் தங்க நகையுடன் கூடிய பணப்பையை தவறவிட்டுச் சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த கீழசெக்காரக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த பிச்சாண்டி (வயது 27), ஆறுமுகம் ( வயது 26) ஆகிய இருவரும் அந்தப் பையை எடுத்து மனித நேயத்துடன், நேர்மையான முறையில் தட்டாப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.