தூத்துக்குடி:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அம்மாவட்டம் பாரதி நகரில் உள்ள உயிரிழந்தவர்களின் குடும்பங்களை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று (டிசம்பர் 9) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கிய அமைச்சர் - தூத்துக்குடி செய்திகள்
இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று (டிசம்பர் 9) நிவாரண நிதி வழங்கினார்.
அமைச்சர் கடும்பூர் ராஜூ
பின்பு அந்த குடும்பங்களைச் சேர்ந்த சரண்யா என்பவரிடம் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம், அன்னலட்சுமி என்பவரிடம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம், விஜய் என்பவரிம் ரூ. 3 லட்சம் என முதலமைச்சர் நிதியிலிருந்து மொத்தம் 12 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அப்போது, அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பேரிடர் நிவாரண நிதி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு