தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் நேரில் சென்று அங்கு கரோனா நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
தீப்பெட்டி பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய அமைச்சர்கள் - corona latest news
தூத்துக்குடி: இளையரசனேந்தல் தீப்பெட்டி தொழிற்சாலை பணியாளர்களுக்கு அமைச்சர்கள் கடம்பூர்ராஜூ, ராஜலட்சுமி இருவரும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர்.
அதையடுத்து, இளையரசனேந்தல் ரெங்கா தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர் வரதராஜன் ஏற்பாட்டில் அமைச்சர்கள் கடம்பூர்ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் தீப்பெட்டி தொழிலாளர்கள் 465 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருள்கள், முகக் கவசங்கள் உங்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் தொகுப்பை வழங்கினர். அதைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்ராஜூ, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், பந்தல் அமைப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு தனது சொந்த செலவிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டதில், தீப்பெட்டி தொழிலாளர்கள் விடுபட்டது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. அதையடுத்து முதலமைச்சர் தமிழ்நாட்டில் 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்". இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
இதையும் படிங்க:தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய அமைச்சர்