தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பால் உற்பத்தி அலுவலக திறப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்கள் - Milk Production Office Opening Ceremony

தூத்துக்குடி: மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலக திறப்பு விழாவை அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ ஆகியோர் புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழா ஏற்பாடுகள்

By

Published : Oct 8, 2019, 2:50 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய ஆவின் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். பொது மேலாளர் தியகராஜ் தங்கையா முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் தமிழக ஆவின் பொது மேலாளர் காமராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

விழா ஏற்பாடுகள்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 26 ஆயிரம் லிட்டர்கள் அளவுக்கு ஆவின் நிறுவனம் மூலம் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. இதை 30 ஆயிரம் லிட்டராக அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சிகள் நடபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய பால்பண்ணை அமைப்பதற்காக ஆவின் நிறுவனம் சார்பில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து இடம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தூத்துக்குடி மாவட்டம் சுற்றுலா தலமாக இருப்பதால் கோவில்பட்டி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டனம், தூத்துக்குடி உள்பட முக்கிய இடங்களில் அதிநவீன ஆவின் பார்லர்கள் அமைக்கப்படவேண்டும். இதனால் ஆவின் பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய முடியும்’ என்றார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆவின் கூட்டுறவு ஒன்றிய திறப்பு விழாவிற்கு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. இதற்காக மாவட்ட ஆவின் நிர்வாகம் சார்பில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏவுக்கு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இன்று நடைபெற்ற ஆவின் ஒன்றிய அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details