தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் பிரசாதம் தபால் மூலம் வழங்க ஏற்பாடு - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் - அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

தூத்துக்குடி: இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்துகள் படிப்படியாக மீட்கப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

Minister
Minister

By

Published : Feb 12, 2021, 9:40 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.4 கோடி மதிப்பில் தங்க கொடிமரத்துக்குத் திருப்பணி, சிறப்புப் பூஜை நடைபெற்றது. அதுமட்டுமல்லாது அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன், பூவனநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள திருமண மண்டபம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

மேலும் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோயிலில் ரூ.9 கோடி மதிப்பில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், இந்து சமய அறநிலையத்துறை குழுத் தலைவர் மோகன், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு.... உடன் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அதிமுக நிர்வாகிகள்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறுகையில், 'தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையில் ஏற்கெனவே 11 மண்டல இணை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. மேலும் கூடுதலாக 9 மண்டல இணை ஆணையர் அலுவலகம் அமைக்க 110 விதியின்கீழ் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருநெல்வேலியிலிருந்து பிரித்து தூத்துக்குடி, தென்காசியை இணைத்து தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு மண்டல இணை ஆணையர் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் பீடம் 12 அடி, முருகன் சிலை 123 அடி என மொத்தம் 135 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்துகள் படிப்படியாக மீட்கப்பட்டு வருகிறது.

ரூபாய் 28 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூரில் யாத்திரீகர்கள் தங்குவதற்கான அறைகள் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் பிரசாதம் தபால் மூலம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது படிப்படியாக அனைத்து கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 12 ஆயிரம் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவேண்டிய கோயில் குடமுழுக்கு தமிழ்நாடு முழுவதும் முறையாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூரில் வெளிப்புற பிரகார கட்டுமானப் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது' என்றார்.

இதையும் படிங்க: ’ரூ.1,282 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் மீட்பு’: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

ABOUT THE AUTHOR

...view details