தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், கோட்டாட்சியர் விஜயா, தொடக்கக்கல்வி இயக்குநர் பழனிசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் ஞான கௌரி, நேஷனல் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் அருணாச்சலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கினார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது, "நீட் தேர்வில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு காரணமாக ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்வை பொருத்தவரை சூழ்நிலைக்கு ஏற்ப கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவார்.
10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை இன்னும் பத்து தினங்களுக்குள் அறிவிக்கப்படும். பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று விரைவில் அந்த அட்டவணை வெளியிடப்படும். தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது, பெற்றோர்கள் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 7.5% இடஒதுக்கீடு: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அரசு பள்ளி மாணவர்கள்!