தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமா படப்படிப்பு அனுமதி குறித்து முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை! - minister kadamnur raju

தூத்துக்குடி: சினிமா படப்படிப்புக்கு அனுமதியளிப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  சினிமா படப்பிடிப்பு அனுமதி  பாரதிராஜா  கடம்பூர் ராஜூ  minister kadamnur raju  cinema shooting permission
சினிமா படப்படிப்பு அனுமதி குறித்து முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை

By

Published : Aug 4, 2020, 4:08 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்க சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 11.13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்தவைத்தார். மேலும், தூய்மைப்பணியாளர்கள் தூய்மைப் பணிக்கு பயன்படுத்துதவற்காக 2.20 லட்சம் மதிப்பிலான 7 மூன்று சக்கர வாகனங்களை கொடியசைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. தற்போது பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாரதிராஜா சினிமா படப்பிடிப்பு குறித்து எங்களை அணுகிய போது விளக்கம் அளித்தோம். சின்னத்திரை படப்பிடிப்பு என்பது ஒரு அரங்குக்குள் நடப்பது. ஆனால், சினிமா படப்பிடிப்பு என்பது வெளிப்புறத்தில் நடப்பது. அதனால், அதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

காவல்துறை அனுமதி என உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை வாங்கவேண்டிய சூழ்நிலையில் சினிமா படப்பிடிப்பு என்பது தற்போதைய சூழலில் சாத்தியம் இல்லை. இருந்தாலும் இது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்யப்படும். மத்திய அரசு தற்போது திரையரங்குகளைத் திறக்க தடை விதித்துள்ளதால், தமிழ்நாட்டிலும் அது தொடரும்" என்றார்.

இதையும் படிங்க:அரசுக்கு எதிராகப் பதிவிட்டால் கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க திமுக மனு

ABOUT THE AUTHOR

...view details