தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் கிருமி நாசினி தெளிப்பதற்காக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கும் ராட்சத வாகனங்களின் செயல்பாட்டை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இந்த வாகனம் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படும். கரோனா பரவலைத் தடுப்பதற்காக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்படும். மாநகராட்சிப் பகுதியில் புகை செலுத்தி கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.