தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 18, 2019, 6:03 PM IST

Updated : Oct 18, 2019, 6:49 PM IST

ETV Bharat / state

அதிமுகவுக்கு தலைமை ஏற்கிறாரா சசிகலா? ஓ.எஸ். மணியன் பளீச் பதில்

தூத்துக்குடி: ஏழு உட்பிரிவுகளை இணைத்து ஒரே பிரிவாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

minister o.s.manian

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாங்குநேரியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணனை வெற்றி பெற வைக்க தமிழ்நாடு அமைச்சர்கள் அங்கேயே தங்கி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுகவை விமர்சிக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அதிமுக மாபெரும் இயக்கம், இது தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. நாள்தோறும் அதிமுக வளர்ந்துகொண்டேதான் இருக்கும். குறைவு என்ற வார்த்தைக்கு இடமில்லை என்று கூறினார்.

திமுக பணப்பட்டுவாடா குறித்து பேசிய ஓ.எஸ்.மணியன், இங்கு யாரும் அவர்கள் செய்த குற்றத்தை தெரியப்படுத்துவதில்லை. திருடன் தான் தப்பிக்க "திருடன், திருடன்" என்று ஓடியது போன்று இருக்கிறது என்றார்.

மேலும், சசிகலா மீண்டும் அதிமுகவில் தலைமை ஏற்பாரா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சசிகலா சிறையில் இருந்து வரட்டும் பார்ப்போம். 7 உட்பிரிவுகளை இணைத்து ஒரே பிரிவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.

Last Updated : Oct 18, 2019, 6:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details