தூத்துக்குடி: திருச்செந்தூர் நகராட்சி மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் திமுக மாபெரும் வெற்றி பெறும். அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு அருமையாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நன்றாக செயல்பட்டு வருகிறார்" என்றார்.
உதயநிதி குறித்த கேள்விக்கு கோபப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு! - அமைச்சர் கேஎன் நேரு செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக மூத்த அமைச்சர்கள் முன்மொழிவது குறித்த கேள்விக்கு, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கோபப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதி குறித்த கேள்விக்கு கோபப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக மூத்த அமைச்சர்கள் முன்மொழிவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கோபமடைந்த அமைச்சர் கே.என்.நேரு, சத்தமாக 'நகருங்கள்' என்று சொல்லிவிட்டு காரின் கதவை வேகமாக திறந்து புறப்பட்டுச் சென்றார். இந்த நிகழ்வு திமுகவின் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:'அல்லேலுயா பாபு' என அமைச்சர் சேகர் பாபுவை விமர்சித்த எச்.ராஜா!
Last Updated : Jan 2, 2023, 3:22 PM IST