மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 33ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பும், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, "சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்ஜிஆரை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லாதவர்கள். மத்திய அரசு மற்றும் மாநில அரசராக இருந்தாலும் மக்களுக்கான எந்தத் திட்டங்களையும் அந்த அரசு தான் செய்யும். இலவச திட்டமாக இருந்தாலும் ஆளுகின்ற அரசு தான் செய்ய வேண்டும்.