தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 417 பயணாளிகளுக்கு 2 கோடியே 11 லட்சம் மதிப்பில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஓடிடி (OTT) தமிழ்நாடு மட்டுமல்ல உலகளாவிய பிரச்னை. ஓடிடியில் திரைப்படம் வெளியீடு தொடர்பாக தமிழ்நாட்டில் சட்டம் ஏதும் இல்லை. சூழ்நிலையை கருத்தில் கொண்டு திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், திரைப்படத்துறையினர் நலன் கருதி கலந்து பேச வேண்டும். இதனால், பல்லாயிரம் திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.