தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் அம்மா மினி கிளினிக் மற்றும் தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், தருவைகுளத்தைச் சார்ந்த அந்தோணி மைக்கேல் என்பவரது படகில் மீன்பிடிக்க சென்ற ஏழு பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் அறிந்ததும் அவர்களை மீட்க முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மீனவர்கள் ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.