தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசிய கருத்தைத் திரும்ப பெற வேண்டும்’ - Thirumavalavan booked for remarks on Manusmriti

தூத்துக்குடி: எம்.பி. திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசியிருந்தால் அந்தக் கருத்தைத் திரும்ப பெற வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

minister-kadampur-raju
minister-kadampur-raju

By

Published : Oct 24, 2020, 10:43 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் உள்ள பிராமணர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராமர் பஜனை மடத்தில் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தார்.

கொலு பொம்மைகளைப் பார்வையிட்ட பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ”நடிகர்கள் தங்களது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. அவர் எப்போதும் ஆண்டுக்கு இருமுறை சந்திப்பது வழக்கம். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை” எனப் பதிலளித்தார்.

திரையரங்கு உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து மூன்றாண்டுக்கு ஒருமுறை திரையரங்குகள் புதுப்பிக்கப்படும் என்ற அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”வரும் 28ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள், அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துவார். இதில் திரையரங்கு திறப்பது குறித்து முக்கிய அம்சம் இடம்பெறும்” என்றார்.

பெண்கள் குறித்து திருமாவளவனின் கருத்து பற்றிய கேள்விக்கு, ”பெண்களை இழிவுப்படுத்திப் பேசுவது தவறு. திருமாவளவன் தான் அவ்வாறு சொல்லவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். இருந்தாலும் ஒருவேளை அவர் அவ்வாறு கூறி இருந்தால் அந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டும்” எனப் பதிலளித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு பேசிய காணொலி

தீபாவளி பண்டிகை வர இருக்கும் நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, அது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

இதையும் படிங்க:என் மீது வழக்குப்பதிவு செய்ததை வரவேற்கிறேன் - தொல்.திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details