2021 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அதிமுக மகளிர் அணி குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் இன்று (நவம்பர் 29) நடைபெற்றது. இக்கூட்டத்தில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மகளிர் பூத் கமிட்டி சிறப்பாக செயல்பட ஆலோசனைகளை வழங்கினார்.
இதில், அரசுப் பள்ளியில் பயின்று தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த கழுகுமலையைச் சார்ந்த சுதா என்ற மாணவியை அமைச்சர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், தனது சொந்த நிதியிலிருந்து 25 ஆயிரம் ரூபாயை மாணவியின் படிப்பு செலவுக்காக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.