தமிழ்நாட்டில் அரசியல் களம் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் பரப்புரைக்காக கோவில்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு திட்டங்குளம், தேவர் காலனி, முத்துநகர், துரைச்சாமிபுரம், செவந்திபட்டி, துறையூர், விஜயாபுரி ஆகிய பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.
கோவில்பட்டியில் புதுமண தம்பதியிடம் வாக்குச் சேகரித்த அமைச்சர் கடம்பூர் ராஜு! - தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி: விஜயபுரி கிராமத்தில் திருமணம் முடிந்துவந்த புதுமணத் தம்பதியரிடம் அமைச்சர் கடம்பூர் ராஜு வாக்குச் சேகரித்தார். அப்போது தனது பத்தாண்டு சாதனை துண்டுப் பிரதியை வழங்கி தனக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.
கோவில்பட்டியில் வாக்கு சேகரித்த அமைச்சர் கடம்பூர் ராஜு
அப்போது விஜயபுரி பகுதிகள் வீதியில் நடந்துசென்று வாக்குச் சேகரித்து வந்தபோது, விஜயபுரி கிராமத்தில் திருமணம் முடிந்துவந்த புதுமணத் தம்பதி திருமணம் முடிந்து, தனது ஊருக்கு வந்த தம்பதிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது தனது பத்தாண்டு சாதனை துண்டுப்பிரதியை வழங்கி தனக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.