தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு நாளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி வேட்பாளர்கள் தங்களது இறுதிகட்டப் பரப்புரையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு களமிறக்கப்பட்டுள்ளதால், அவர் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இலுப்பையூரணி, சலவையர் காலனி, விஸ்வநாதன் காலனி உள்ளிட்டப் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் பணி செய்து கொண்டிருந்த பெண்களிடம் உரையாடினார்.
விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் விளைநிலங்களுக்குச் சென்று வயல் வேலை எப்படி போகிறது என்று களநிலவரங்களைக் கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னதாக நேற்றிரவு (ஏப்.2) கோவில்பட்டி நகரத்தில் உள்ள வக்கீல் தெரு, பாரதி நகர், மேட்டுத் தெரு, ஜோதி நகர், ஸ்டாலின் காலனி, மேட்டுகாளியம்மன் கோயில் தெரு ஆகியப் பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜு தீவிர பரப்புரை செய்தார்.
மக்கள் மத்தியில் அவர் பேசுகையில்,'திமுக இந்த முறை ஆட்சி அமைக்கப்போவதுமில்லை.
அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு இரண்டாவது பைப்லைன் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதை சொந்தம் கொண்டாட முடியாது. இதுதொடர்பாக நாங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளோம்.
இங்கு போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆர்.கே நகரில் ஜெயித்து இரண்டு முறை மட்டுமே சட்டப்பேரவைக்கு வந்தார். இதுவரை மக்களைச் சந்திக்கவில்லை. இங்கு வந்து என்ன செய்யப் போகிறார்? 20 ரூபாய் நோட்டை கொடுத்து மக்களை ஏமாற்றியவர் தான், டிடிவி தினகரன். மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது அதிமுக தான்’ என்றார்.
இதையும் படிங்க:'நீ ஜெய்ச்சுருவ'- திமுக வேட்பாளரின் தலையில் திருநீறு அடித்த பூசாரி