தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு; கரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள்' - saffron shawl to MGR statue

தூத்துக்குடி: எம்ஜிஆர் சிலை மீது காவித் துண்டு போர்த்தியவர்கள் கரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ

By

Published : Jul 25, 2020, 3:38 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

அதில் கலந்துகொண்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "எம்ஜிஆர் சிலை மீது காவித் துண்டு போர்த்தியது சமூக விரோதிகளின் செயல்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

கரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்கள், மத நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிப்பவர்கள் என அத்தனை பேரும் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அப்படிப்பட்டவர்களை அரசு மட்டுமல்ல, மக்களும் விழிப்போடு இருந்து, அவர்களைச் சமூகத்திலிருந்து புறந்தள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'பத்திரிகையாளர்கள் பாதுகாப்பில் கவனம் கொள்ள வேண்டும்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details