சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரைக்காக விமானம் மூலம் இன்று (மார்ச் 12) தூத்துக்குடி விமான நிலையம் வந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் கூறியதாவது, இந்த தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியலை முதல் முதலாக அறிவித்த கட்சி அதிமுக. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக அமோக வெற்றி பெறும். அம்மாவின் நினைவிடத்தில் வெற்றியை சமர்ப்பித்து, மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரியணை ஏறுவார்.