தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் - கடம்பூர் ராஜு வாக்குறுதி - kadambur raju press meet

தூத்துக்குடி: கோவில்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு, அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

kadambur-raju
கடம்பூர் ராஜூ

By

Published : Mar 15, 2021, 7:15 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கடம்பூர் ராஜு, அதிமுக தேர்தல் காரியாலயத்தைத் திறந்துவைத்தார்.

பின்னர், சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் சாமி தரிசனம்செய்தார். அங்கிருந்து திறந்த வேனில் நின்றவாறு பரப்புரையைத் தொடங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

ஆதரவாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட மூன்றாவது முறையாக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2016 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2016 முதல் தற்போது வரை அமைச்சராகவும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எண்ணற்ற அரசின் சாதனை திட்டங்களைத் தொகுதி மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளேன்.

மக்களும் என்னுடன் உள்ளனர். நானும் மக்களுடன்தான் இருக்கிறேன். இது ஒன்றே எனக்கு வெற்றி வாய்ப்பைத் தேடிக் கொள்ளும் சூழ்நிலை உள்ளது. இந்த முறை எனது வெற்றி வாய்ப்பு என்பது அனைவரும் வைப்புத்தொகையை இழக்கக்கூடிய அளவுக்கு மிகச் சிறப்பான வெற்றியாக இருக்கும்.

மக்கள் கோரிக்கை வைப்பதை இலவசம் என்று சொல்ல முடியாது. டிடிவி தினகரன் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பெரியகுளம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். அவர் மக்களுக்கு எதுவும் வழங்கியது இல்லையா? மக்களுக்கு வழங்கியது எப்படி இலவசம் என்று கூற முடியும். மக்களுக்கு எது இல்லையோ அதை வழங்க வேண்டியது நல்ல அரசின் கடமை. அந்தக் கடமையை நாங்கள் செய்கிறோம். தேர்தல் அறிக்கையைப் பார்த்தவுடன் அதிமுகதான் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று முடிவுக்கு வந்துவிட்டனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு

மூன்றாவது முறையாக வெற்றிபெற்றால், தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

தாமிரபரணி - வைப்பாறு இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் கேரள மாநிலம் பம்பை - வைப்பாறு இணைப்பதற்குப் பல கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதைப் பெற்றுத்தரும்போது கோவில்பட்டி வளம் கொழிக்கும் பூமியாக பெறும் நிலையை உருவாக்கித் தருவேன்" என்றார்.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details