தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிலர் குடும்பத்துக்காக ஆட்சி செய்வார்கள், ஆனால் மக்களுக்காக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா' - minister kadambur raju election campaign

தூத்துக்குடி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜு பரப்புரையில் ஈடுபட்டார்.

ஆனால் மக்களுக்காக ஆட்சி செய்தவர் அம்மா
ஆனால் மக்களுக்காக ஆட்சி செய்தவர் அம்மா

By

Published : Mar 18, 2021, 4:22 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கழுகுமலை, கயத்தாறு ஒன்றியத்தில் உள்ள வேலாயுதபுரம், ஜம்புலிங்கபுரம், கரடிகுளம், சிலோன் காலனி, சி.ஆர். காலனி, சங்கலிங்கபுரம், காலங்கரைபட்டி, அழகப்பபுரம், பாலகிருஷ்ணாபுரம், நாச்சியார்பட்டி ஆகிய பகுதிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

பின்னர் பரப்புரையில் பேசிய அமைச்சர், "தேர்தல் என்றால் போட்டியில்லாமல் இருக்காது. எனக்கு ஆண்டவன் இருக்கிறான், நீங்கள் இருக்கிறீர்கள், என்ன கைவிட மாட்டீர்கள். கடவுள் நம்பிக்கை வேண்டும் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நடிக்கின்றனர்.

கடம்பூர் ராஜு தேர்தல் பரப்புரை
மகன், பேரன் என்று குடும்பத்துக்காக சிலர் ஆட்சி செய்வார்கள். ஆனால் மக்களுக்காக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. நீங்கள் அளிக்கும் ஒரு ஓட்டால் தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி அமையும். அதை அதிமுக செய்யும் மறந்துவிடாதீர்கள். கடந்த பத்து ஆண்டுகளில் நான் என் மனசாட்சிப்படி இந்தத் தொகுதிக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துள்ளேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details