தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்கிறது” - அமைச்சர் கடம்பூர் ராஜு - minister kadabur raju ampaign

தூத்துக்குடி : திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து சுயநலத்திற்காக ஆட்சிக்கு வர வேண்டுமென நினைப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.

minister kadabur raju kovilpatti campaign
minister kadabur raju kovilpatti campaign

By

Published : Mar 22, 2021, 4:08 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது பரப்புரையை பாண்டவர்மங்கலம், சண்முகசிகாமணி நகர், பல்லக்கு ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி சண்டா மேளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர் .

பின்னர் பரப்புரையில் பேசிய அவர், ”இதுவரை பத்து முறை தேர்தல் நடைபெற்றிருக்கிறது. ஏழுமுறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை வெற்றி பெற்றபோதும் திமுக அவர்களது குடும்பத்திற்கான ஆட்சிதான் நடத்தியிருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றிய கட்சி அதிமுக.

அமைச்சர் கடம்பூர் ராஜு

திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து தனது சுயநலத்திற்காக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கின்றனர். ஏப்ரல் ஆறாம் தேதி நீங்கள் செலுத்தக்கூடிய ஒரு வாக்கு ஒரு தொகுதியில் எம்எல்ஏவை தேர்ந்தெடுப்பதற்கான வாக்காக நீங்கள் நினைக்காதீர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை ஆட்சி செய்யக்கூடிய நமது உணர்வுகளை மதிக்கக்கூடிய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர்கள்.

இந்த தொகுதியில் அதிமுகவும், திமுகவும்தான் களத்தில் இருக்கின்றன. நாங்கள் நீடிக்க வேண்டுமென்று நினைக்கிறோம் அவர்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்”என்றார்.

இதையும் படிங்க:

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடு - சத்யபிரத சாகு

ABOUT THE AUTHOR

...view details