தூத்துக்குடி:அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்தில் தேசிய சுகாதாரத்திட்டத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றை இன்று(அக்.25) மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் அமைச்சர் கீதா ஜீவன் இன்று திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மையத்தில் ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் பேர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இதில் விபத்து, இதய நோய், பிற காயங்கள், தீ விபத்து, பாம்புக்கடி போன்ற பல்வேறு அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் இந்த நோயாளிகளில் 80% விழுக்காடு பேர் குணமாகி செல்கின்றனர். அறுபது விழுக்காடு பேர் உள்நோயாளிகளாக தொடர் சிகிச்சைப்பெறுகின்றனர்.
இவர்களில் சிலருக்கு காலதாமதம் இன்றி உடனடியாக அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதால், இந்தப்பிரிவில் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவை ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களுக்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பேட்டி அளித்தபோது கூறுகையில், 'தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிறப்பு சிகிச்சைகளுக்காக பிற ஊர்களுக்கு செல்வதைத் தவிர்ப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.131 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது' என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவ்ரவ் குமார், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சிவகுமார், உறைவிடம் மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெபமணி, அவசர சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் ராஜவேல் முருகன், வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விரைவில் தூத்துக்குடியில் ரூ.131 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை - அமைச்சர் கீதா ஜீவன் இதையும் படிங்க:இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Whatsapp முடங்கியது