தூத்துக்குடி:கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (செப். 23) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து இயற்கை மரணம் நிதியுதவி திட்டத்தில் 11 பேருக்கு தலா ரூ.17 ஆயிரம், ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1000, 23 பேருக்கு திறன்பேசி உதவி உள்ளிட்ட ரூ.4.99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்து சேவையை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் கோவில்பட்டி நகராட்சியில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ திட்டத்தில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது
தொடர்ந்து கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில்' விடுபட்ட பயனாளிகளுக்கு மறுவிண்ணப்பங்கள் செய்யப்பட்டு வருவதை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் வரை இரவு நேரங்களில் சர்குலர் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.