தமிழ்நாடு

tamil nadu

கோயில்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்?... அமைச்சர் விளக்கம்

By

Published : Aug 10, 2021, 3:38 PM IST

Updated : Aug 10, 2021, 4:09 PM IST

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கோயில்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

கரோனா முன்னெச்சரிக்கையாகவே கோயில்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு - அமைச்சர் கீதாஜீவன்
கரோனா முன்னெச்சரிக்கையாகவே கோயில்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு - அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பேரூராட்சியில் உள்ள வெட்டுவான் கோயில் முதல் உச்சி பிள்ளையார் கோயில்வரையிலும் கைப்பிடிகள், படிக்கட்டுகள் அமைத்தல் பணிகளுக்காக, ரூ. 1 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் இன்று (ஆக.10) அடிக்கல் நாட்டினார்.

இதே போல் கயத்தார் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட, காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பணியினையும் அவர் தொடங்கிவைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு மக்கள் வரவேற்பு

நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக வயதானவர்களுக்கும், கிராம மக்களுக்கும் பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் 72% சதவீதம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட மாவட்டங்களில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

நலத்திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கீதாஜீவன்

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, ஏழை, எளிய மக்கள் நலன் காண முனைப்போடு செயல்படுகிறார். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு, தமிழ்மொழியின் வளர்ச்சி உள்ளிட்டவை முன்னேற்றம் அடைய அயராது பாடுபடுகிறார்.

கரோனா முன்னெச்சரிக்கையாகவே அனுமதி மறுப்பு

கரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆடி அமாவாசை தினத்தில் மக்கள் அதிகளவில் கோயில்களில் கூடுவார்கள் என்பதற்காகத்தான் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக யாத்திரை செல்வோம் என்பது சரி கிடையாது” என்றார்.

இதையும் படிங்க:போராட வாங்க சாப்பிட்டுப் போங்க - வேலுமணியின் கூத்து

Last Updated : Aug 10, 2021, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details