தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை? முதன்மைக் கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் செய்த அமைச்சர்! - சமூக நலத்துறை அமைச்சர்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தங்களை ஏன் அழைக்கவில்லை என அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை? முதன்மை  கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் செய்த அமைச்சர்
நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை? முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் செய்த அமைச்சர்

By

Published : Jun 10, 2022, 7:04 PM IST

தூத்துக்குடி: கலை நிகழ்ச்சிகள் மூலம் அரசு பள்ளிகளில் பயில்வது குறித்தும் அதிக மாணவ, மாணவிகளை சேர்க்கும் விதமாகவும், தூத்துக்குடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் ஆதவா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர், மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு, திடீர் விசிட் அடித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இந்நிகழ்ச்சிக்கு ஏன் தங்களை அழைக்கவில்லை? உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருக்கிறேன் என தெரியாதா என முதன்மைக்கல்வி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய தூத்துக்குடி, முதன்மைக்கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 'அங்கே மாவட்ட ஆட்சியரை கூட அழைக்கவில்லை; தூத்துக்குடியில் மட்டும் தான் ஆட்சியரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறோம்' எனக் கூறினார்.

நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை? முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் செய்த அமைச்சர்

மேலும், மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், 'நிகழ்ச்சி நடத்தும் இப்பள்ளியில் முழுமையாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அப்படி இருப்பின் எவ்வாறு இப்பள்ளியில் நிகழ்ச்சி நடத்தலாம்? இப்பள்ளியில் எதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி?' எப்படி நிகழ்ச்சி நடத்தலாம் என காரசாரமாக கேள்வியேழுப்பினார்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் புகார் கொடுப்பதாகவும், அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

இதையும் படிங்க:ஆதீன விஷயங்களில் அரசு தேவையின்றி மூக்கை நுழைக்கிறது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details