தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் கோயிலில் ரகசிய வழிபாடு நடத்திய அமைச்சர் சக்கரபாணி - காரணம் என்ன?

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோயிலில் அமைச்சர் சக்கரபாணி சத்ருசம்ஹார பூஜை செய்துவிட்டு செய்தியாளர்களைப் படம் பிடிக்காதவாறு கோயில் பேட்டரி வாகனத்தில் தனியார் விடுதிக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 4, 2023, 4:02 PM IST

திருச்செந்தூர் கோயிலில் ரகசிய வழிபாடு நடத்திய அமைச்சர் சக்கரபாணி - காரணம் என்ன?

தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியன் சுவாமி திருக்கோயில் சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது. இந்த நிலையில் இன்று (ஆக.04) ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சத்ருசம்ஹார கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

கோயிலில் மூலவர், சண்முகர், வள்ளி - தெய்வானை அம்பாள், பெருமாள், விநாயகர் மற்றும் தட்சணா மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்த அவர் எதிரிகளை வெல்லக்கூடிய திரிசதி பூஜை நடத்தி வழிபாடு நடத்தினார்.

ஆடிப்பெருக்கு தினத்தில் பரிகார ஸ்தலத்தில் பரிகார பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மேலும் திமுக அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சத்ருசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.

இந்த நிலையில் இன்று அமைச்சர் சக்கரபாணி கோயிலில் ரகசியமாக சிறப்புப் பூஜை செய்து வழிபாடு நடத்துவதாக தகவலறிந்து படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர்களை தவிர்த்து, மாற்றுப்பாதையில் வெளியேறிய அமைச்சர் சக்கரபாணி, கோயில் பேட்டரி வாகனத்திலேயே விதிமுறைகளை மீறி தனியார் விடுதிக்குச் சென்று அங்கிருந்து காரில் ஏறி அவசரமாக புறப்பட்டுச் சென்றார். அப்போது படம் பிடித்த செய்தியாளர்களை அமைச்சருடன் வந்தவர்கள் தடுத்து படம் பிடிக்காதவாறு பார்த்துக்கொண்டனர்.

ஆடிப்பெருக்கு தினத்தில் அமைச்சர் சக்கரபாணி சத்ருசம்ஹார மூர்த்திக்கு எதிரிகளை வெல்லக்கூடிய சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் - காட்பாடி வஞ்சியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details