தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.. 3 நாட்களுக்குப் பிறகு மீட்பு! - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

Minister Anitha Radhakrishnan rescue video: தூத்துக்குடி வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 2:45 PM IST

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி:தமிழ்நாட்டில் புதிதாக உருவாகிய வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் அதீத கனமழை கொட்டித் தீர்த்தது.

இடைவிடாது பெய்த அதிக கனமழையால் தாமிரபரணி ஆறு, கோதையாறு, குழித்துறை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆறுகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டு பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். மழை, வெள்ளத்திற்கு ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடியில் பெய்த கனமழை தற்போது நின்றுள்ளதால், தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. அதேபோல், மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஏரல் பகுதியில் மழை வெள்ளத்தால் சிக்கித் தவித்த கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளத்திலிருந்து மீட்டு வெளியே அழைத்து வரப்பட்டுள்ளார். தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின் பெயரில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வந்தனர். இது குறித்த காணொலிக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க:வெள்ளத்தால் ஸ்ரீ வைகுண்டம் ரயிலில் சிக்கிய 649 பயணிகள் பத்திரமாக மீட்பு - பதற வைக்கும் நிமிடங்கள்.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details