தூத்துக்குடி: தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளை திறக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் நீட் தேர்வுவேண்டாம் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் முடிவை அறிவிப்பார்.
அதேசமயம் கரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.
இதனிடையே ஜூலை 31ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும்.அதன்பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். ஆகஸ்டில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆகஸ்டில் பள்ளிகள் திறப்பு?