தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மினி மாரத்தான் போட்டியை தடுத்து நிறுத்திய காவல்துறை! - உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபெறும் மாரத்தான்

தூத்துக்குடி : முதலமைச்சர் வருகையை காரணம் காட்டி  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் நடைபெற இருந்த மினி மாரத்தான் போட்டியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

mini marathon thuthukudi

By

Published : Oct 13, 2019, 7:45 PM IST

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ப்ரண்ட்ஆப் இந்தியா அமைப்பு சார்பில் தூத்துக்குடியில் மினிமாரத்தான் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து காலையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் இருந்து தொடங்க இருந்த மினிமாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள மாவட்டம் முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்கள், பள்ளி மாணவ - மாணவியர்கள் ஏராளமானவர்கள் அதிகாலையில் இந்த பகுதிக்கு வருகை தந்தனர்.

இந்த நிலையில் மினிமாரத்தான் போட்டியை நடத்த காவல்துறையினர் திடீர் என தடைவித்தனர்.

மினி மாரத்தான் போட்டியை தடுத்து நிறுத்திய காவல்துறை
இதைத்தொடர்ந்து போட்டியை நடத்தும் அமைப்பினர் இதுகுறித்து கேட்டபோது தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடிக்கு வருவதால் போட்டி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். பின், மாரத்தான் போட்டி ரத்துசெய்யப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பங்குபெற வந்த வீரர்கள், மாணவ மாணவியர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
மாநிலச் செயலாளர் பாப்புலர் ப்ரண்ட்ஆப் இந்தியா செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் நாங்குநேரியில் பிரசாரம் செய்வதற்கு தூத்துக்குடி வாகைகுளம் வருகை தந்து அங்கிருந்து நாங்குநேரி சென்றார். இதில் முதலமைச்சர் தூத்துக்குடி நகருக்குள் வராத நிலையில், காவல்துறையினர் முதலமைச்சர் வருகையைக் காரணம்காட்டி உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியை தடைசெய்துள்ளது கண்டனத்திற்குறியது என பாப்புலர் ப்ரண்ட்ஆப் இந்தியா அமைப்பினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

தூத்துக்குடியில் 1,250 கிராம் கஞ்சா, ரூ.81ஆயிரம் பறிமுதல் - ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details