தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அரசினர் சுற்றுலா விருந்தினர் மாளிகையும் உள்ளது. இதன் வளாகத்தில் நேற்று (டிச 09) நள்ளிரவில் அரியவகை மான் இனத்தைச் சேர்ந்த கடமான் என்று அழைக்கப்படும் மிளா மான் புகுந்தது.
இதனையடுத்து இன்று (டிச.10) காலை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில், திருநெல்வேலி வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் மிளா மான் (கடமான்) உள்ள இடத்திற்கு வருகை தந்தனர்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் புகுந்த மிளா மானை (கடமான்) வனத்துறையினர் கயிறு கட்டி மீட்டனர். அப்பொழுது எதிர்பாரா விதமாகக் கழுத்து இறுகி அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.