தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் சரவண பெருமாள் (25). இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதில் நேற்று (நவ. 30) மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற சரவண பெருமாள், பின்னர் திரும்பி வரவில்லையாம்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இந்நிலையில் இன்று (டிச. 1) காலை அப்பகுதியில் சலவைத் படித்துறையில் மழைநீர் தேங்கிக் கிடந்த குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தார்.