நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையை முடித்துக் கொண்டு விமானம் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை புறப்பட்டார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி, சீன பிரதமர் ஸி ஜின்பிங் வருகையை வரவேற்று ஏற்கனவே நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். அதில் இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு பயனுள்ள பயணமாக அமைய வேண்டும் என்ற எனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளேன்" என்றார்.
இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பும் பயனுள்ளதாக அமைய வேண்டும் - ஸ்டாலின்
தூத்துக்குடி: இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு பயனுள்ள பயணமாக அமைய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
stalin
சீன- இந்தியப் பிரதமர் சந்திப்பு மூலம் தொழில் முதலீடுகள் ஈர்க்க கூடுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இது குறித்து நீண்ட அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் ஆகவே அதை பற்றி இப்போது பேசத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.