தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக வெங்காய விலை உச்சத்தைத் தொட்டுவருகிறது. உயர்ந்துவரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமுதாய அமைப்புகளும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் வெங்காய விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயில் தலைமையில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சின்ன வெங்காயத்தை மாலையாக அணிந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வெங்காய விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஒப்பாரிவைத்தனர்.