தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 லட்சம் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் வாழ்வில் விளக்கேற்றுமா மத்திய பட்ஜெட்? - match box manufacturers expectation on budget meet

தூத்துக்குடி: ஜி.எஸ்.டி வரி விதிப்பு, ஊக்கத் தொகை குறைப்பு என அடுத்தடுத்து மத்திய அரசின் நடவடிக்கையால் அழிவை நோக்கிச் செல்லும் தீப்பெட்டி தொழிலுக்கு மத்திய பட்ஜெட்டில் ஊக்கம் கிடைக்குமா என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.

match box manufacturers expectation on budget meet
match box manufacturers expectation on budget meet

By

Published : Feb 1, 2020, 10:54 AM IST

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியானது 90 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் போன்ற பகுதிகளில்தான் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

மேலும், அதிக அளவில் வெளிநாடுகளுக்கும் தீப்பெட்டி ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. இந்தத் தொழிலில் அதிகளவு பெண்கள்தான் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொழிலில் நேரடையாக 5 லட்சம், மறைமுகமாக 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் பேர் பயன் பெற்றுவருகின்றனர்.

தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் மத்திய அரசுக்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. எனவே இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு தீப்பெட்டி ஏற்றுமதிக்கு 7 விழுக்காடு தொகை வழங்கியது. இதற்கிடையில் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 7 விழுக்காடு தொகை 4 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்ததும் சிறுதொழில் பட்டியலில் இருந்து தீப்பெட்டி தொழில் நீக்கப்பட்டது மட்டுமின்றி, தீப்பெட்டிக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டது. இந்த வரியை குறைக்கவேண்டும் என்று உற்பத்தியாளர்கள் போராடி வரும் நிலையில், சமீபத்தில் ஊக்கத் தொகையை 1.5 விழுக்காடாக மத்திய அரசு குறைத்துள்ளது 4 விழுக்காடாக வழங்கப்பட்ட தொகை இனி 1.5 விழுக்காடாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு, சிறுதொழில் பட்டியில் இருந்து நீக்கம், ஊக்கத்தொகை குறைப்பு என அடுத்தடுத்து மத்திய அரசின் நடவடிக்கையால் தீப்பெட்டி தொழில் அழிவை நோக்கி செல்வதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் உற்பத்தியாளர்கள். இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிலாவது ஏதாவது ஆறுதலான செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் வாழ்வில் விளக்கேற்றுமா மத்திய பட்ஜெட்

இதையடுத்து 18 விழுக்காடு ஜி.எஸ்.டியை குறைத்து, மீண்டும் 7 விழுக்காடு ஊக்கதொகை வழக்கவேண்டும் எனவும், மீண்டும் சிறு தொழில் பட்டியலில் தீப்பெட்டி தொழிலை சேர்க்கவேண்டும் எனவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு ரூபாய்க்கு தீக்குச்சி மூலமாக வெளிச்சம் கொடுக்கும் தங்களுக்கு மத்திய பட்ஜெட் தீப்பெட்டி தொழிலுக்கு நல்ல வழியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:'தார் சாலை தரமில்லை' - ஒப்பந்ததாரரை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details