தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையை சீரமைக்கக் கோரி கோவில்பட்டியில் மனிதசங்கிலி போராட்டம் - Manpower protest in kovilpatti

தூத்துக்குடி: சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

By

Published : Nov 20, 2019, 4:40 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மங்கள விநாயகர் கோயில் திருப்பத்தில் தொடங்கும் மந்தித்தோப்பு சாலை மிகவும் குறுகலாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த சாலை குறுகலாகவும், மோசமாகவும் உள்ளதால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

மேலும், காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதனால் இந்த சாலையை சீரமைத்துக் கொடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனிதச்சங்கிலி நடைபெற்றது. இதில் வியாபாரிகள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டமும் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையிலான அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க : இலவச மின்சாரம் வழங்காததைக் கண்டித்து கொட்டும் மழையிலும் விவசாயிகள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details